அன்பழகனுக்கு கனிமொழியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  திஷா   | Last Modified : 19 Dec, 2018 03:19 pm
kanimozhi-s-birthday-wishes-for-anbazhagan

திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர் க.அன்பழகன் இன்று அவருடைய 97-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கருணாநிதி மறைவால் இவ்வாண்டு பிறந்தநாளைக் கொண்டாடப் போவதில்லை என ஏற்கனவே அன்பழகன் அறிவித்துவிட்ட நிலையில், கழகத்தினர் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தி.மு.க-வின் மாநிலங்களைவை உறுப்பினர் கனிமொழி, "திராவிட இயக்கக் கொள்கைகளை தூணாகத் தாங்கிப் பிடிக்கும் பேராசிரியர் பெருந்தகைக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! தமிழின உணர்வையும்,பகுத்தறிவுக் கொள்கையையும் பெரிதாக நினைக்கும் பேராசிரியர், மேலும் பல்லாண்டு தமிழ் மக்களுக்காக பணியாற்ற வாழ்த்தி வணங்குகின்றேன்!" என தனது வாழ்த்துகளை அன்பழகனுக்குத் தெரிவித்திருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close