அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-இன் தம்பி ஓ.ராஜா அதிரடி நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 05:10 pm
ops-s-brother-o-raja-terminated-from-aiadmk

அதிமுக கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் தம்பி ஓ.ராஜா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மதுரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவராக தேர்வாகி இன்று பொறுப்பேற்க உள்ள நிலையில், ஓ.ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாலும், களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.ராஜா நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் கழகத்தினர் யாரும் தொடர்பில் இருக்க வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

அதிமுக அறிக்கை:

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close