வரும் மார்ச் மாதத்திற்குள் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டி முடிக்கப்படும்: தமிழக அரசு தகவல்

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 06:08 pm
jayalalitha-memorial-will-be-finished-within-march-tn-govt

வரும் மார்ச் மாதத்திற்குள் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டி முடிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கக்கூடாது என்றும், தற்போது நடைபெற்று வரும் ஜெயலலிதா நினைவிடப் பணிகளுக்கு தடைவிதிக்க கோரியும் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், வரும் மார்ச் மாதத்திற்குள் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டி முடிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close