வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜரான சசிகலா...2 வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு!

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 04:36 pm
sasikala-case-hearing-at-egmore-court

சசிகலாவுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜரான சசிகலா மீது 2 வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஜெ.ஜெ.டி.வி.க்கு வெளிநாட்டில் எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில் சசிகலா மீது ஏற்கனவே காணொலிக் காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஆவணத்தில் கையெழுத்திடுவது போன்ற சில நடைமுறைகள் பின்பற்றப்படாததால், மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் அவர் நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில், சசிகலா ஆவணத்தில் கையெழுத்திடுவது தேவையில்லை என்று கூறியது மட்டுமில்லாமல் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலாக ஆஜராகக்கூறி, வழக்கை 4 மாதத்தில் முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று வீடியோகான்பரன்சில் ஆஜர்படுத்தப்பட்ட சசிகலா மீது 2 வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும் 2 வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஜனவரி 9ம் தேதி சசிகலாவை வீடியோ கான்பரன்ஸிங்கில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close