ராகுல் விஷயத்தில் அவசரப்பட்டேனா?: ஸ்டாலின் பதில்

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 05:32 am
nobody-rejected-rahul-s-candidature-for-prime-minister-stalin

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முக ஸ்டாலின் முன்மொழிந்தது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என யாரும் கூறவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். மோடியை வீழ்த்த பெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் நாட்டிலுள்ள பல்வேறு மாநில கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், ராகுல் காந்தியை முதல் ஆளாக பிரதமர் வேட்பாளருக்கு முன்மொழிந்தார் ஸ்டாலின். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா, உ.பி-யின் மாயாவதி அகிலேஷ் யாதவ் போன்ற பல தலைவர்கள் ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

தேர்தலுக்குப் பின்னரே பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டாலினின் அவசர முடிவால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இது குறித்து விழுப்புரத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் ஸ்டாலின் பேசினார். அப்போது, அந்நாளில், கலைஞர் கருணாநிதி, இந்திரா காந்தியையும், பின்னர் சோனியா காந்தியையும் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததை போலவே தானும் ராகுலை முன்மொழிந்ததாக கூறினார்.

மேலும், "நான் ராகுலை முன்மொழிந்தது தவறு என்று யாரும் சொல்லவில்லை. தேர்தலுக்குப் பின்னர் முடிவெடுக்கவேண்டும் என கூறுகின்றனர். ஒவ்வொரு மாநில தலைவருக்கும் ஒவ்வொரு பிரச்னை உள்ளது. அதை தீர்த்த பிறகு, பிரதமர் வேட்பாளர் குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள். தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே பாரதிய ஜனதா இருக்கக் கூடாது என்பதற்காகவே, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் வந்தேன்" என்று ஸ்டாலின் கூறினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close