எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 12:46 pm
mgr-death-anniversary-admk-members-pays-his-tributes-to-their-memorial

முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 31ம் ஆண்டு நினைவு நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்.ஜி ராமச்சந்திரனின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் அவரது கட்சி தொண்டர்களாலும், ரசிகர்களாலும் மாநிலம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில்  அ.தி.மு.க சார்பில் மலர் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்று எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 500 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் நிகழ்வினைக் காண கூடியதால் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் ஆணையர் பாபு தலைமையில் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கையேடுகளில் உள்ள உறுதிமொழிகளை முன்மொழிய அவரை பின் தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

உறுதிமொழி அறிக்கை:

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close