ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி!

  shriram   | Last Modified : 24 Dec, 2018 08:16 pm
pon-radhakrishnan-rebutts-stalin

கூட்டணி குறித்து நியாயமற்ற வாதங்களை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைப்பதாகவும், கலைஞர் அடிக்கடி சொல்லும் கூடா நட்பின் விளைவை திமுக அனுபவிக்கும், என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதாகவும்  கூறினார். அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து விளக்க கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

எமர்ஜென்ஸியை விட மோசமான ஆட்சி நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளது குறித்து பேசிய அவர், "இந்த ஆட்சியில் எத்தனை சிட்டிபாபுகள் கொல்லப்பட்டுள்ளனர்? எத்தனை ஆற்காடு வீராசாமி போன்ற பெரியவர்கள் செவிப்பறைகள் நொறுக்கப்பட்டுள்ளது? திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸுடன் ஏற்படுத்தியுள்ள கூட்டணி அவருக்காக உயிர்த்துறந்த சிட்டிபாபு போன்றவர்களுக்கு செய்யப்படும் துரோகம். மிகப்பெரிய, தோல்வியை திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்திக்கவுள்ளது" என்றார். 

மேலும், "1999ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்த போது கொள்ளை அடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த 10 ஆண்டுகளில் காங்கிரஸுடன் வைத்திருந்த கூட்டணியில் கொள்ளையோ கொள்ளை அடிக்கப்பட்டதற்கு, ஆ.ராசாவும், மன்மோகன் சிங்கும் ஒருவருக்கொருவர் சொல்லி வருவது சாட்சி" என்றார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக இங்கு நடத்திய கூட்டத்தை திமுக, காங்கிரஸ் பெங்களூரில் நடத்தியிருக்க வேண்டும் என்றும், மேகதாது விவகாரத்தில் திமுக காங்கிரஸ் கட்சியினரின் நடிப்பு, நவராத்திரி சிவாஜி கணேசனை மிஞ்சிய நடிப்பாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close