நீங்களும் என்னைய மாதிரி தான்...மறந்துடாதீங்க..! - முதல்வருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 05:01 pm
senthil-balaji-replied-to-cm-edappadi-palanisamy

தான் உள்ளிட்ட 5 அமைச்சர்களின் தயவினால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

முன்னதாக அதிமுகவில் இருந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அமமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜி சமீபத்தில் திமுகவில் இணைந்துள்ளார். ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அவர், தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என்று பேசினார். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த நிகழ்வே மிகப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில, கரூரில் செய்தியர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, "வர விருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறும் தகுதி படைத்தவர் ஸ்டாலின் ஒருவர். இந்த 5 ஆண்டுகளில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள தம்பிதுரை எந்த திட்டத்தையும் செய்யவில்லை. 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிதான் தம்பிதுரையின் கடைசி வெற்றி. அடுத்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஸ்டாலின் யாரை அறிவிக்கிறாரோ அவரை தான் வெற்றி பெற வைப்போம். 

கூவத்தூரில் முட்டி போட்டு முதல்வரானாவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. நானும் என்னுடன் இருந்த 5 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிச்சாமிக்கு ஓட்டு போடாமல் இருந்திருந்தால் அவர் என்றைக்கோ விவசாயம் பார்க்க போயிருப்பார். ஆனால், இன்றைக்கு நாட்டிற்கு ஏதோ நன்மை செய்துவிட்டது போல் பேசுகிறார். அவர் வேண்டுமானால் 4 முறை சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கலாம். ஆனால், அவரும் நானும் ஒன்று தான். அவரும், நானும் ஒரே நாளில்தான் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டோம். வரலாற்றினை மறந்து விடாதீர்கள் முதல்வரே" என்று பேசியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close