உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: அமைச்சர் தங்கமணி

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 01:09 pm
minister-thangamani-press-meet

உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பது தொடர்பாக எங்கு வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவை போன்று இன்று புதைவட மின் கேபிள் அமைப்பது சாத்தியமற்றது எனவும் தெரிவித்தார்.

இன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, "உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதனால் பாதிக்கப்படும் நிலங்களுக்கு தேவையான நிவாரண உதவியை செய்ய அரசு தயாராக உள்ளது. 

கேரளாவை போன்று பூமியின் அடியில் கேபிள் அமைப்பது என்பது தமிழகத்தில் சாத்தியமற்றது. இதுகுறித்து நான் எங்கு வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close