அப்போலோவில் ரூ.1 கோடி செலவுக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர் தான்: சி.வி சண்முகம் கருத்துக்கு ஜெயக்குமார் ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 05:49 pm
minister-jayakumar-press-meet-and-talks-about-jayalalitha-s-death

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்தை வரவேற்கிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அப்போலோவில் ரூ.1 கோடிக்கு மேல் உணவு செலவாகியதற்கு காரணம் சசிகலா குடும்பம் தான் எனவும் தெரிவித்துள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது தற்போதைய தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "சி.வி.சண்முகம் திடீரென்று ஏன் அவ்வாறு பேசியுள்ளார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரிக்கட்டும். அப்பல்லோவில் சசிகலா குடும்பம் தான் 75 நாட்கள் தங்கி ரூ.1 கோடிக்கு உணவு சாப்பிட்டார்கள் மருத்துவமனையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என யாரும் தங்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர். 
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அழைத்தால் அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்குமூலம் அளிப்பார்" என்றும் கூறியுள்ளார். 

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது: அமைச்சர் சி.வி. சண்முகம் சர்ச்சை பேட்டி

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close