திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? - நாளை கூடும் அதிமுக ஆட்சிமன்றக்குழு!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 05:13 pm
thiruvarur-byelection-admk-meeting-held-tomorrow

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அதிமுக சார்பில் திருவாரூர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை செய்ய நாளை அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான  எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது

திருவாரூர் தொகுதி, முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதி என்பதால் இதில் அதிமுக வெற்றி பெறும் முனைப்பில் பிரபலமான ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து நாளை திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? என்பது தெரிய வரும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close