சட்டசபையில் கஜா புயல் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம்!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 11:47 am
resolution-for-gaja-cyclonea

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கஜா புயல் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக இன்று கொண்டு வந்துள்ளது. 

தமிழகத்தில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள டெல்டா மாவட்ட மக்கள், இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை. வழக்கமான நடைமுறைக்கு கொண்டுவர அரசு சார்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுடன் இணைந்து பல்வேறு தனியார் அமைப்புகளும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. 

இந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபையில், கஜா புயல் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக உறுப்பினர்கள் இன்று கொண்டு வந்துள்ளனர்.  கேள்வி நேரத்திற்கு பிறகு கஜா புயல் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close