பட்டா இல்லாவிட்டாலும் கான்க்ரீட் வீடுகள் - துணைமுதல்வர்  ஓபிஎஸ் உறுதி!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:13 pm
tn-assembly-govt-will-give-concrete-houses-to-people-who-are-all-in-gaja-cyclone-affected-areas-ops

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டா இல்லாவிட்டாலும் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் 
ஓபிஎஸ் உறுதியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். 

கஜா புயல் பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்.எல்.ஏவுக்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டா இல்லாவிட்டாலும் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதியளித்தார். 

மேலும் அவர் பேசுகையில், 'கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். பட்டா இல்லையென்றாலும் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். பட்டா இருப்பவர்களுக்கு அந்தந்த இடத்திலேயே வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close