'என் வழி...தனி வழி...' - திருவாரூர் தேர்தல் குறித்து தினகரன் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 04:59 pm
dinakaran-press-meet

திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற தனி பார்முலா வைத்துள்ளதாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஒருபக்கம் தொடங்கிய நிலையில், மற்றொரு பக்கம் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் எம்.எல்.ஏவுமான  டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "திருவாரூர் தேர்தலில் வெற்றி பெற தனி பார்முலா வைத்துள்ளேன். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவில் ஈடுப்பட்டது அதிமுக தான், திமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபடவில்லை என அவர்கள் அரசியலுக்காக வேண்டுமானால் பொய் சொல்லலாம்.

என்னை பொறுத்தவரையில் நான் சப்ளித்தனம் செய்யமாட்டேன், திருவாரூர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தேர்தலை ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும். ஆனால், திருவாரூரில் உள்ள 303 வாக்குச்சாவடிகளிலும் தனி பார்முலா வைத்து உள்ளேன். பணம்கொடுப்பவர்கள் அதிகாரிகளிடம் மாட்டிகொள்வார்கள். பணம் கொடுப்பவர்களை முக்காடுபோட்டுக் கொண்டு ஓட வைப்போம்" என தெரிவித்தார்.

முன்னதாக, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலின் போது தினகரன் கட்சியினர் அப்பகுதி மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்தாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close