இரண்டு தினங்களில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 06:15 pm
admk-candidate-to-be-announced-in-coming-days

அதிமுக ஆட்சிமன்ற கூட்டத்தில், திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளருக்கான நேர்க்காணல் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத் தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், இன்று அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆட்சிமன்ற  உறுப்பினர்கள் முன்னிலையில், திருவாரூர் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளருக்கான நேர்க்காணல் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், வேட்பாளரை ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தேர்தலை கண்டு அதிமுகவிற்கு பயமில்லை என்றும், எப்போது தேர்தல் வைத்தாலும் அதில் அதிமுக தான் வெற்றி பெறும் என்றும் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close