'மதுரைக்காரங்க ரொம்ப பாசக்காரங்க' - அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 11:15 am
madurai-sellur-raju-talks-about-madurai-people

'மதுரைக்காரங்க ரொம்ப பாசக்காரங்க, பாசத்துக்காக அவங்க எதுவும் செய்வாங்க' என அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மக்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திரைப்படங்களில் மதுரைக்காரங்க அரிவாள் எடுப்பது, கஞ்சா கசக்குவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும். 

உண்மையில், மதுரைக்காரங்க ரொம்ப பாசக்காரங்க, பாசத்துக்காக எதுவும் செய்வாங்க என பேசியுள்ளார். 

நேற்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,  'ஏழைகளின் கஷ்டம், எங்களை போன்ற ஏழைகளுக்கு தெரிந்ததால் தான் ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது' என்று கூறியதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். தற்போது மதுரை மக்களை பற்றி பேசியது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close