1,037 இலங்கை அகதிகளுக்கும் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 11:36 am
tn-govt-s-pongal-gift-to-be-given-to-srilankan-refugees-also-minister-sp-velumani

கலர் பார்க்காமல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் சிறப்புத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வைத்து தொடங்கி வைத்தார். ரூ.258 கோடி ரூபாயில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு துண்டு கரும்புத்துண்டு மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான முந்திரி, ஏலக்காய் உள்ளிட்டவை இருக்கும். இத்துடன் ஏழை மக்களின் நலன் கருதி ரூ.1000 தொகையாகவும் வழங்கப்படுகிறது. 

நாளை முதல் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி, முறைகேடுகள் நடக்காமல் இருக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தில் ஏதேனும் முறைகேடு நடந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாணையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆயிரம் குடும்ப அட்டை உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாளர்களை அதிகப்படுத்தி மக்களுக்கு எளிமையாக பொங்கல் பரிசுத்தொகை கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். நியாய விலைக் கடை ஊழியர்கள் இல்லாத சமயத்தில் இதர துறை ஊழியர்களை பணியில் அமர்த்தி மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "கலர் பார்க்காமல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் சிறப்புத்தொகை வழங்கப்படும். 1,037 இலங்கை அகதிகளுக்கு ஆயிரம் ரூபாய் உடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close