சப்பாணி குதிரையை யார் வேண்டுமானாலும் களம் இறக்கலாம்: ராஜேந்திர பாலாஜி

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 01:16 pm
minister-rajendra-balaji-press-meet

சப்பாணி குதிரையை யார் வேண்டுமானாலும் களம் இறக்கலாம், பந்தயத்தில் குதிரை இருக்கும்போது நல்ல குதிரையா? குதிரை ஓடுமா? ஓடாதா? என்று பார்த்து களமிறக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். 

திருவாரூர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "குதிரை நன்றாக ஓடுமா? என பார்த்து தான் போட்டியில் களமிறக்க வேண்டும்.

சப்பாணி குதிரையை யார் வேண்டுமானாலும் களம் இறக்கலாம், பந்தயத்தில் குதிரை இருக்கும்போது நல்ல குதிரையா? குதிரை ஓடுமா? ஓடாதா? என்று பார்த்து களமிறக்க வேண்டும். அதிமுக நல்ல வேட்பாளரை தேர்வு செய்து களமிறக்கும்" என்று பேசினார். 

தொடர்ந்து கமல் குறித்த கேள்விக்கு, 'திருவாரூர் தொகுதியில் போட்டியிட கமல்ஹாசனுக்கு ஆள் இல்லை. அவர் திருவாரூர் தேர்தலில் போட்டியிட மாட்டார்" என்றார். 

மேலும், 'பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்றால் மக்களவையில் அதிமுக எம்பிக்கள் ஏன் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார்.

பெண்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போட்டி போட்டுக்கொண்டு சபரிமலை செல்வது நல்லதல்ல என்றும் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close