திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 08:43 am
by-election-postponed-in-thiruvarur

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்துள்ளது.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, அவரது எம்எல்ஏ தொகுதியான திருவாரூருக்கு வரும் 28 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அங்கு கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நிர்மல் ராஜ், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அண்மையில் அறிக்கை அனுப்பியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close