"மினி சட்டமன்றத் தேர்தல்" எனச் சொல்லும் அளவுக்கு, தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும், வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் சேர்த்து, ஒரே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்துசெய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
மினி சட்டப்பேரவைத் தேர்தல் என சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும், வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
newstm.in