சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு; அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 04:38 pm
3-years-prison-for-admk-minister-appeal-to-madras-hc

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறியதையடுத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் அருகே உள்ள பாகலூர் என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் தயார் செய்து விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த சமயத்தில், அங்கு வந்த அரசு வாகனங்கள், பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மீது கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவம் நடைபெற்றது. 

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் 16 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றதால், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை இழக்கிறார்.

இந்நிலையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறியதையடுத்து சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ரெட்டி 2001 முதல் அதிமுகவில் உள்ளார் மற்றும் முன்னாள் கால்நடைத்துறை அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியாது என்ற விமர்சனமும் இவர் மீது உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close