ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று நீதிமன்றம் கூறவில்லை: வைகோ

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 12:24 pm
vaiko-press-meet-over-sterlite-case

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஆலையை திறக்க தடைவிதித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவும் ரத்தும் செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வைகோ செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, "ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசியப் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனது மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, என்னையையும் எதிர்மனுதாரராக சேர்த்துள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலையினை திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. நீர் மாசு ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு இதில் முடிவெடுக்கலாம் என்று தான் கூறியுள்ளது. வேதாந்தா தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் பிரச்னை முடிவுக்கு வரும் என்பது என் கருத்து. ஆனால் தமிழக அரசு இதில் கொள்கை முடிவு எடுக்காது. ஏனென்றால் தமிழக அரசு மறைமுகமாக வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் இரண்டும் இணைந்து தான் செயல்படுகின்றன" என்று  வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close