திமுக ஊராட்சி சபை கூட்டம் இன்று திருவாரூரில் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 10:41 am
dmk-gram-panchayat-meet-starts-today

திமுக சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டம் இன்று திருவாரூரில் தொடங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார்.

"மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்" என்ற கொள்கை முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார். இன்று முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 17ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து திருவாரூருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து இன்று திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் வைத்து முதல் ஊராட்சி சபை கூட்டம் தொடங்கி வைத்தார். 

இது தொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான மக்கள் விரோத அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இன்று தொடங்குகிறது. மக்களிடம் செல்வோம்! மக்களிடம் சொல்வோம்! மக்கள் மனங்களை வெல்வோம்!" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close