விழா ஏதுமின்றி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 09:00 am
mgr-arch-opened-today

சென்னை மெரினா அருகே காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு இன்று விழா எதுவும் நடத்தப்படாமல் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிரே அமையவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.2.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த வளைவை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம், ஆனால் விழா போன்று எதுவும் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படியே, விழா எதுவோ நடத்தப்படாமல் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close