திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கொல்கத்தா பயணம்!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 12:34 pm
dmk-leader-mk-stalin-goes-to-kolkatta-for-all-party-meeting

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கொல்கத்தா செல்லவிருக்கிறார். 

2019ம் ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, கட்சிகள் அனைத்தும் தீவிரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக, பல்வேறு மாநில எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட ஏற்பாடு வகுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் காங்கிரஸுடன் தான் கூட்டணி என தெளிவாக அறிவித்து விட்டார். சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவின் போது, பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்த முதல் நபரனார் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு செயல்படுவோம் என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இதையடுத்து எதிர்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை  கொல்கத்தா செல்கிறார். இதர மாநில கட்சியின் தலைவர்களும் இந்த கூட்டத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close