கொடநாடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 03:58 pm
cbi-investigation-is-must-for-kodanad-estate-case

கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை தனி நீதிபதி குழு அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் வலியுறுத்தியுள்ளார். 

நேற்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தங்கத்தமிழ்ச் செல்வன். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச்சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணையின் மூலமாகவே தெரிய வரும். 

எனவே இந்த விசாரணையின் போது அவரது முதல்வர் பதவியை தற்காலிகமாக வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும். விசாரணை முடிவடைந்து அவர் மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபிக்கப்பட்ட பின்னரே அவர் மீண்டும் பதவியேற்க வேண்டும். 

மேலும், கொடநாடு சம்பவம் தொடர்பாக தனி நீதிபதி அல்லது சிபிஐ விசாரித்தால் தான் உண்மையை கொண்டுவர முடியும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close