தேர்தல் விவகாரத்தில் தலைவர் ஸ்டாலினின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: கனிமொழி எம்.பி

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 05:41 pm
i-can-accept-mk-stalin-s-decision-kanimozhi

மக்களவைத் தேர்தலில் நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். கட்சி தொடர்பான விவகாரத்தில் ஸ்டாலினின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல, தமிழகமே அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறது. மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் அதிமுக அரசு, வருவாயில் கவனம் செலுத்துகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துவதை சில கட்சிகள் விமர்சிக்கின்றன. இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு தொடுத்ததன் மூலம் திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 

மக்களவைத் தேர்தலில் நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். கட்சி தொடர்பான விஷயத்தில் ஸ்டாலினின் முடிவுக்கு கட்டுப்படுவேன்' என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close