ஆதரவாக குரல் கொடுப்பதில்லை; ஆனால் கூட்டணி மட்டும் வேண்டுமாம் - பாஜகவினரை விளாசிய தம்பிதுரை!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 12:41 pm
thambidurai-press-meet

அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக எம்.பிக்கள் ஒருமுறை கூட ஆதரவாக குரல் கொடுத்ததில்லை, ஆனால் கூட்டணி மட்டும் வேண்டும் என்று கேட்பது என்ன நியாயம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சில் விலகியுள்ளார். 

இன்று திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் எங்களை அவமானப்படுத்துவதோடு, அடிமை எண்ணத்தோடு பார்க்கிறார்கள். 

நீட், கஜா புயல் உள்ளிட்ட எந்த வகையிலும் தமிழகத்திற்கு பாஜக உதவவில்லை. ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ஆனால் கூட்டணி மட்டும் வேண்டுமாம். நாடாளுமன்றத்தில் அதிமுகவின் 34 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த போது பாஜகவினர் ஏன் ஆதரவு அளிக்கவில்லை?

அ.தி.மு.க எம்.பிக்களுக்கு ஆதரவாக பாஜக எம்.பிக்கள் எப்போதும் குரல் கொடுத்ததே இல்லை. ஆனால் எங்களது உறவு மட்டும் வேண்டும் என எண்ணுகிறார்கள்" என்று பேசினார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close