வங்கத்து சகோதரி, இரும்புப் பெண்மணி, எளிமையான மனிதர் - மம்தாவிற்கு ஸ்டாலின் புகழாரம்!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 02:57 pm
stalin-speech-at-kolkatta-meeting

ஆளும் பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பேசினார். 

'வங்கத்துப்புலிகளுக்கு தமிழ்நாட்டு ஸ்டாலினின் வணக்கம்' என பெங்காலியில் பேசி உரையைத் தொடங்கிய ஸ்டாலின் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு, பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்பதை முன்வைத்து பேசினார். மேலும், தமிழகத்திற்க்கும், மேற்கு வங்கத்திற்கும் உள்ள ஒற்றுமை குறித்து குறிப்பிட்ட அவர் மம்தாவை எளிமையான மனிதர், இரும்புப்பெண்மணி என பாராட்டினார். 

ஸ்டாலின் உரையின் சுருக்கம்: 

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த மாபெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். வங்கத்து சகோதரி, இரும்பு பெண்மணி, எளிமையான மனிதர் மம்தா ஜி.

இந்தியாவில் நடக்கவிருக்கும் 2வது சுதந்திர போராட்டம் தான் இந்த மே மாத தேர்தல்.  இந்த கூட்டத்தில் நான் ஒட்டுமொத்த இந்தியாவை பார்க்கிறேன். வேறு வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். பாஜக-வை வீழ்த்த வேண்டும், பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் நாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல், அனைவரும் ஒன்றிணைந்தால் அதனை செய்துகாட்ட முடியும் என்பதில் ஐயமில்லை.

எதிரிகளே இல்லாத இந்தியா என்று பிரதமர் மோடி கூறி வந்தார்..எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா என்று கூறி வந்தார்...ஆனால், தற்போது அவர் எடுத்தவுடன் முதலில் விமர்சனம் செய்வது எதிர்கட்சிகளைத் தான். நாம் ஒன்று சேர்ந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை காட்டிலும் அவர் நம்மை பார்த்து பயப்படுகிறார் என்பது தான் உண்மை. 

மோடிக்கு எதிரான இந்த அணியில் சேர்ந்து இங்கு வருகை புரிந்திருக்கும் தலைவர்களுக்கும், வரமுடியாத தலைவர்களுக்கும், கூட்டணியில் வரத் தயங்கும் தலைவர்களுக்கும் நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் மோடி நமது கூட்டணியை பார்த்து பயப்படுகிறார். 

என்னை பார்த்து சிலர் கேட்கிறார்கள். உங்களுக்கு மோடி என்ன இடைஞ்சல் செய்தார்? ஏன் அவரை இவ்வளவு விமர்சிக்கிறீர்கள்? என்று... அவர் எனக்கு இடைஞ்சல் செய்தாரா என்பது முக்கியமல்ல. நாட்டு மக்களுக்கு இடைஞ்சல் செய்கிறாரா? என்பது தான் முக்கியம். 

நான் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தைத் ஒழித்து நாட்டு மக்கள் அனைவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று கூறினார் மோடி. ஆனால் அது என்னவாயிற்று? மாறாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்தது தான் மிச்சம். இது தான் உலகம் சுற்றும் பிரதமரின் சாதனைகள். இது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி, மக்களுக்கான ஆட்சி இல்லை. 

பணமதிப்பிழப்பு பற்றி பிரதமர் மோடி பேசலாமா? அதிகாரத் திமிர் மற்றும் ஊழல் தான் பிரதமர் மோடி தான். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும். 

இப்படி உணர்ச்சிமிக்க கூட்டத்தை கூட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி. நரேந்திர மோடி பார்த்து பயப்படும் தலைவர் தான் இரும்புப்பெண்மணி மம்தா பானர்ஜி. கலைஞர் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பவர். 

பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வரும் தேர்தலில் அக்கட்சியை வீழ்த்துவோம். நமது ஒற்றுமை, பிரதமர் மோடியை வீழ்த்தி, நமக்கு வெற்றிக்கு வழிகாட்டும். 

இலக்கியம், ஆன்மிகம் என அனைத்திலும் தமிழகம் மற்றும் மேற்குவங்கத்திற்கு பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close