ஸ்டாலின் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை; அவரிடம் ஒரு நடுக்கம் இருக்கிறது: தமிழிசை பதிலடி!

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 03:14 pm
tamilisai-soundararajan-press-meet-at-madurai

பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உறுதியாக இல்லை; அவரிடம் நடுக்கம், தயக்கம் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வருகிற ஜனவரி 27ம் தேதி மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருகிறார். மேலும், மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். 

பொதுக்கூட்டம் அமையவுள்ள இடத்தில் இன்று பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "கொல்கத்தாவில் கூடிய அனைத்து கட்சியினரும் ஊழல்வாதிகள் தான். வரும் தேர்தலில் இவர்கள் புறக்கணிக்கப்படவேண்டும். மக்களுக்கான ஒரு நல்ல கூட்டணியை பாஜக அமைக்கும். பல்வேறு நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு வரவுள்ளன. 

முன்னதாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்த மு.க.ஸ்டாலின், கொல்கத்தா கூட்டத்தில் அதை ஏன் சொல்லவில்லை. அங்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இருந்தனர். ஸ்டாலின் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருந்தால் அந்த இடத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லியிருக்கலாமே. அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை. அவரிடம் ஒரு நடுக்கம், தயக்கம் இருக்கிறது. 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி வருகிற 27ம் தேதி மதுரைக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 10 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் தமிழகம் வர உள்ளார். ஆக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மூன்று முறை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்" என்று தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close