ரஃபேல் போர் விமான பேரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுக: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 04:15 pm
stalin-urged-pm-modi-to-investigate-about-rafale-deal

பிரதமர் மோடிக்கு நாட்டின் மீது அக்கறை இருக்குமானால் ரஃபேல் போர் விமான பேரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " நாட்டின் பாதுகாப்பிற்கான ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் நாட்டு மக்களுக்கு அளித்தே தீரவேண்டிய நியாயமான விளக்கத்தை அளிக்க மறுத்து, தானே தரையில் விழுந்து கும்பிட்டு மரியாதை செலுத்திய ஜனநாயகத்தின் பிரம்மாண்ட சின்னமான பாராளுமன்றத்திற்கும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து - உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முன்பே தகவல்களைச் சொல்ல முடியாது என்று எல்லாவற்றையும் மூடிமறைத்து அடாவடி செய்தது பா.ஜ.க. அரசு.

இதுவரை ரஃபேல் ஊழலே நடக்கவில்லை என்று வீராப்புப் பேசிய மத்திய பா.ஜ.க. அரசின் பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், சட்ட அமைச்சர் - ஏன் பிரதமர் நரேந்திரமோடி ஆகிய அத்தனை பேரின் முகமூடியும் கிழித்து தொங்கவிடப்பட்டு, “இமாலய ஊழல்” இப்போது வெளியே வந்து இந்திய மக்கள் மத்தியில் நாற்றமடிக்கத் தொடங்கி விட்டது.

நாட்டின் பாதுகாப்பில் உள்ளபடியே அக்கறை இருக்குமென்றால், மடியில் கனமில்லை என்ற தைரியம் இருக்கிறதென்றால் ரஃபேல் போர் விமானப் பேரம் குறித்து உடனடியாக “பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு” பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தரவிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close