தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தியிருப்பது சட்ட விரோதம்: கி.வீரமணி கடும் கண்டனம்!

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 05:25 pm
k-veeramani-condemned-about-ops-activity-at-secretariat

தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு விரோதமாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் முயற்சியில் இன்று (20.1.2019) விடியற்காலை யாகம் நடத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் என்பது எவருடைய தனிப்பட்ட உடைமையும் அல்ல; அரசின் தலைமை அலுவலகமாகும்.

அங்கு குறிப்பிட்ட மதத்தின் செயல்பாடாக யாகம் நடத்தப்பட்டுள்ளது. அரசு என்பது மதச்சார்பற்றது என்று  இந்திய அரசமைப்புச் சட்டம் திட்டவட்டமாகவே உறுதிப்படுத்துகிறது.இந்திய அரசமைப்பின் முகப்புரை என்பது இந்திய அரசமைப்பின் அறிமுகப்பகுதியாகும்.

நாம், இந்திய மக்கள் உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயச்சார்பற்ற மக்களாட்சி குடியரசாக கட்டமைத்திடுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னைத் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் அலுவலகத்தில் யாகம் நடத்தப்பட்டதானது அப்பட்டமான சட்ட விரோதமான நடவடிக்கையே!

இதுபோன்ற யாகத்தின் அய்திகம் என்பது - இந்து மதத்தில் உக்கிரக் கடவுள் என்று கூறப்படும் கால பைரவனுக்கு நடத்தப்படுவதாகும். பதவிகள் கிடைக்கவும், மரண பயம் நீங்கவும் அர்த்தஜாமத்தில் - அதாவது அரை இரவு விழித்திருந்து நடத்தப்படுவதாகும்.

இந்த அடிப்படையில் மட்டுமல்ல, வேறு எந்த அடிப்படையிலும் இந்த யாகம் அதுவும் ஒரு துணை முதல்வரால் நடத்தப்பட்டு இருப்பது கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல, அப்பட்டமான சட்ட விரோதமாகும். இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close