கமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து!

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 05:19 pm
actress-gautami-press-meet

மக்களுக்காக உழைக்கும் தலைவனை இன்று வரை நான் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் என நடிகை கௌதமி தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் - கௌதமி நட்பில் விரிசல் ஏற்பட்ட பிறகு, நடிகை கௌதமி நேரடியாக செய்தியாளர்களிடம் பேட்டிகள் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் பிரதமரிடம் சென்று மனு கொடுத்தார். தொடர்ந்து மீ டூ விவகாரம், பெண்களுக்கான  பாதுகாப்பு குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார். 

இந்நிலையில், இன்று சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் நடிகை கௌதமி, நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "மக்களுக்காக உழைக்கும் தலைவரைத்தான் நான் இன்றுவரை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன். கமல், ரஜினியை மட்டும் நான் குறிப்பிடவில்லை. பொதுவாக அனைவரையும் சேர்த்து தான் நான் குறிப்பிடுகிறேன். 

ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்களின் செயல்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகங்கள் வெளியாகி வருகிறது. அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close