தலைமை செயலகத்தில் நான் யாகம் நடத்தவில்லை, சாமி தான் கும்பிட்டேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் நேற்று அதிகாலையில் சிறப்பு யாகம் நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் பல கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
மதுரை விமான நிலையத்தில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், "தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் எதுவும் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்றால், எம்எல்ஏக்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே?
யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்ற மூட நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா? ஸ்டாலின் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை. எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் தான் அவர் செயல்படுகிறார்" என்று பேசியுள்ளார்.
newstm.in