10% இட ஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 04:43 pm
madras-hc-issues-notice-to-centre-on-dmk-s-plea-against-10-reservation-for-upper-caste-people

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு கொண்டுவந்த விவகாரத்தில் மத்திய அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக சட்டத்திருத்த மசோதாவும் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தும்படி, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. 

இதற்கிடையே, இந்த திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்புக்கும், அரசுத் தரப்புக்கும் இடையே கடுமையான வாதம் நடைபெற்றது.

இந்த வாதத்தின் முடிவில், இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப் உத்தரவிட்டு வழக்கை வருகிற பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close