தம்பிதுரை தன் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டார்....!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 23 Jan, 2019 02:42 pm
thambidurai-started-his-game

தேர்தல் நேரத்தில் குட்டையைக் குழப்பி பேரம் பேச நேரம் பார்த்திட்டார். இது ஏதோ பழைய பொறுமலின் வெளிப்பாடோ என்று மட்டும் தோன்றவில்லை. இன்று, நாடாளுமன்ற கூட்டணியுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு ஐவர் குழு அமைத்து முறைப்படி அறிவிக்கப்பட்டது. அதில் நாடாளுமன்ற அவைக்குழுவின் அதிமுக தலைவரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பி துரையின் பெயர் இல்லை. 

பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தம்பிதுரையை வெளிப்படையாகவே கழட்டி விட்டிருப்பது, உள்கட்சிப் பூசலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

அதிமுகவில் அடுத்து நடக்க இருக்கும் சாத்தியக் கூறுகள்...

1. தம்பிதுரைக்கு அடுத்த எம்.பி சீட் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கலாம். இதனால் கட்சியிலிருந்து அவரே விலகிச் செல்ல மறைமுகமாக நிர்பந்திக்கப்படும்.

2. தம்பிதுரை கட்சிக்குள் கலகத்தை உண்டு பண்ணி, சிலரையாவது பிரித்து தினகரனுடன் சேரலாம். ஆனால், தம்பிதுரைக்கு ஆதரவாக இதுவரை யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்களிடமும் பெரிய வரவேற்புடைய தலைவர் இல்லை. அதனால், ஒரு பலவீனமான நபரை தினகரன் சேர்த்துக் கொள்வாரா என்று தெரியவில்லை.

3. திமுகவிலிருந்து ஒரு நல்ல தொகைக்கு தம்பிதுரையை விலைக்கு வாங்கி முடக்கி வைக்கலாம். அதாவது, அதிமுகவின் உள்கட்சி ரகசியங்களைக் கறக்க ஓரளவு வசதிகள் செய்து கொடுத்து தன் கட்சிக்கு இழுத்து, தேவை தீர்ந்தபின் திமுகவில் ஒரு ஓரமாகக் கிடத்தப்படுவார்.

ஆனால், ஈபிஎஸ்/ஓபிஎஸ் டீம் நாம நினைக்கிற மாதிரி சாதாரண அரசியல்வாதிகள் அல்ல. எல்லாரும் அமாவாசை சத்யராஜ் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வில்லாதி வில்லன் படத்தில் வரும் பூனைக்கண் சத்யராஜ் கேரக்டர் ஆசாமிகள். அவர்களுக்கு காரியம் தான் முக்கியம்.

தம்பிதுரைக்கு ஒரு எம்.பி சீட் கொடுத்து அதில் மெனெக்கெட்டு அவரைத் தோற்கடித்து முடக்கி வைக்கும் அளவுக்கு டைம் எடுக்க மாட்டார்கள். இவ்வளவு நேரத்தில் தம்பிதுரையின் பலவீனங்கள் பக்கம் படையெடுப்பு நடத்தியிருப்பார்கள். முதல்வராகத் தன்னை நியமிக்க டெல்லியில் முயன்று முடியாததால், கடுப்பிலிருந்த தம்பிதுரையை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டே தான் இருந்திருப்பார்கள் இரட்டையர்கள்.

சமயம் பார்த்து மிடாஸ்-ல் (MIDAS) அடித்து ஆனானப்பட்ட சசிகலா குடும்பத்தையே வலுவிழக்கச் செய்தவர்களுக்கு  தம்பிதுரையெல்லாம் எம்மாத்திரம்? 

இப்ப தானே ஆரம்பித்திருக்கிறது? வேடிக்கையை வரிசையாகப் பார்ப்போம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close