கொடநாடு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவினர் கைது!

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 11:17 am
dmk-protest-against-governor-in-kodanad-estate-case

கொடநாடு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கோரி திமுக தரப்பில் இன்று சென்னையில் பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துரைக் ஒத்துழைப்பு அளிக்காத திமுகவினர் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சமீபத்தில் தெஹல்கா நிறுவன முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், கொடநாடு சம்பவம் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் குற்றவாளிகள் சயான் மற்றும் மனோஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரிலேயே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்ததாக கூறினர். இந்த விவகாரத்தில் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரிடம் மனு அளித்தார். ஆனால் மனு அளித்து ஒருவாரம் அளித்தும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் இல்லை. 

எனவே ஆளுநரின் இந்த செயல்பாட்டை கண்டித்து இன்று திமுக தரப்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சேகர் பாபு, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் தலைமையில் சென்னை பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். 

இதில், போலீசார் போராட்டத்தை நிறுத்த கோரிக்கை விடுத்தனர். ஆனால், திமுகவினர் அதனை மறுக்கவே, திமுகவினர் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close