நிரூபித்தால் பாஜகவில் இணையத் தயார்! - உதயநிதி ஸ்டாலின் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 10:37 am
udhyanidhi-stalin-challenged-to-tamilisai-bjp

முரசொலியில் அறங்காவலர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில், பதவி கொடுத்ததை நிரூபித்தால் உடனடியாக பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணையத் தயார்' என உதயநிதி ஸ்டாலின் தமிழிசைக்கு அதிரடியாக சவால் விட்டுள்ளார். 

திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, முரசொலி பத்திரிக்கை மற்றும் திமுக டிரஸ்டில் அறங்காவலர் பதவி கொடுத்திருப்பதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். மேலும், விரைவில் அவருக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். 

இதுகுறித்து பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "திமுக அறக்கட்டளையில் நான் முக்கிய பதவியில் இருப்பதை நீங்கள் நிரூபித்தால், நான் உடனடியாக சாடிஸ்ட் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணையத் தயார். எனக்கு கொடுக்கப்படும் மிகக் கொடூரமான தண்டனை வாய்ப்பு கொடுக்கிறேன். உங்களது பதிலுக்கு காத்திருக்கிறேன் தமிழிசை அக்கா" என்று பதிவிட்டுள்ளார்.

— Udhay (@Udhaystalin) January 24, 2019

 

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close