உலக முதலீட்டாளர்கள் மாநாடு இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்: செல்லூர் ராஜு

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 02:21 pm
minister-sellur-raju-press-meet-at-madurai

மதுரை மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை கலந்தாலோசித்து பேசியிருக்கிறார். மேலும், இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் என அனைவருடைய ஊதியம் எவ்வளவு உள்ளது என்று தெளிவாக கூறியிருக்கிறார்.,

அதேபோல், தமிழக அரசு தற்போது நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று முதல்வர் பலமுறை கேட்டுள்ளார். ஜாக்டோ ஜியோ அமைப்பினரின்  போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தூண்டிவிட தான் செய்வார்கள்" என்றார். 

நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது ஒரு மாயை என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்ததற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டாவது முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று உள்ளது. இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழக இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. பட்டதாரி மாணவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் இதன் மூலம் அதிகரிக்கும்.

எதிர்க்கட்சிக்காரர்கள் பொறுக்க முடியாத ஒரு சூழ்நிலையில் தான் இந்த அரசை குறை கூறிக் கொண்டே வருகின்றனர். மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் முதலீட்டாளர் மாநாடு வெகுவாக பாராட்டியுள்ளார்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close