கவுரவம் பார்க்காமல் முதல்வர் இறங்கி வர வேண்டும்: ஸ்டாலின் 

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 02:26 pm
cm-should-talk-with-government-servents-stalin

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் பழனிசாமி கவுரவம் பார்க்காமல் இறங்கி வந்து, அவர்களுடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜேக்டோ - ஜியோ அமைப்பினர், பல காலமாக தங்கள் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வருகின்றனர். 

ஆனால், இந்த அரசு, அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது. 

நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகள், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இல்லாமல், அவர்களை மேலும் துாண்டிவிடும் வகையில் உள்ளது. 

எனவே, சஸ்பெண்ட் நடவடிக்கையில் ஈடுபடுவது, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடாமல், போராட்டத்தை முடிவுக்கு காெண்டு வர, முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி, முதல்வர் பழனிசாமி, கவுரவம் பார்க்காமல், இறங்கி வந்து போராட்டக்காரர்களுடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என தன் அறிக்கையில் கூறியுள்ளார். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close