ஜெ.,க்கு பாரத ரத்னா: ஜெயக்குமார் மீண்டும் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 02:43 pm
center-should-annonce-baharat-ratna-for-jayalalitha-jayakumar

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற, அ.தி.மு.க.,வின் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறினார். 

இது குறித்து, சென்னையில், அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‛‛முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதை வரவேற்கிறேன். அவர் அந்த விருதுக்கு முற்றிலும் தகுதியானவர்; அவருக்கு வாழ்த்துக்கள். அதே சமயம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற, அ.தி.மு.க.,வின் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close