ஜெயலலிதா, அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது, மேகதாது விவகாரம்: பிரதமரிடம் முதல்வர் மனு

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 03:44 pm
cm-edappadi-palanisamy-gives-petition-to-pm-modi

ஜெயலலிதா, அண்ணா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது, மேகதாது, முல்லைப்பெரியாறு விவகாரம் , கஜா புயல் உள்ளிட்டவை குறித்த கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியிடம் இன்று அளித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். மதுரையில் அடிக்கல் நாட்டுவ விழாவில் கலந்துகொண்டு பேசிய பின்னர், அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசினார். 

இதற்கிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை பிரதமரிடம் அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு: 

►  அணை பாதுகாப்பு மசோதா தயாரிப்பு பணியை நிறுத்தி வைக்க வேண்டும். 

►  முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 

►  கர்நாடக அரசு அளித்த மேகதாது தொடர்பான அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேகதாது திட்டம் இரு அரசுகள், மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்

►  ஜெயலலிதா மற்றும் அறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

►  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும். 

►  ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான சேவை வழங்க வேண்டும்.

►  தமிழக மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் 

►  கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்ட நிதி ஒதுக்க வேண்டும்.

►  தமிழகத்தில் உள்ள பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

►  2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close