எய்ம்ஸ்-யை வைத்து அரசியல் செய்யக்கூடாது: அமைச்சர் கடம்பூர் ராஜு

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 04:33 pm
minister-kadambur-raju-press-meet

பிரதமர் மோடி வருவதை எதிர்க்காமல், ஒரு நல்ல திட்டம் வருகிறது என்பதை ஆதரிக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, "மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும். குடியரசு தினத்தன்று கூட ஆசிரியர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆசிரியர்கள் பணிக்குத் திரும்புவது தான் நல்லது" என்று கூறினார். 

தொடர்ந்து பிரதமர் மோடியின் வருகை மற்றும் எதிர்கட்சியினரின் கருப்புக்கொடி போராட்டம் குறித்து பேசிய கடம்பூர் ராஜு, "அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு பிரதமர் என்ற முறையில் மோடியை வரவேற்க வேண்டும். பிரதமர் மோடி வருவதை எதிர்க்காமல், ஒரு நல்ல திட்டம் வருகிறது என்பதை ஆதரிக்க வேண்டும். எய்ம்ஸ்-யை வைத்து அரசியல் செய்யக்கூடாது. 2016 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி எய்ம்ஸ்-யை கொண்டு வந்துள்ளோம்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

 

 

 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close