ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றும்: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 04:37 pm
mk-stalin-urged-govt-to-take-action-for-jactto-geo-protest

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், தற்போது அதிமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், மாணவர்களின் நலன் கருதி தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்களை பணிக்கு அனுப்ப தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தில் அ.தி.மு.க அரசு எடுக்கும் சட்டவிரோத - அடக்குமுறை நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close