மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 12:31 pm
aiadmk-announcement-regarding-parliament-loksabha-election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் வருகிற பிப்ரவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, இந்தியா முழுவதும் கட்சிகள் குழுக்களை அமைத்து தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் தங்களது பணிகளில், தமிழகத்தில் அதிமுக இன்று மக்களவை தேர்தல் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதாவது, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வருகிற பிப்ரவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ரூ.25,000 செலுத்தி விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, அதிமுக சார்பில் ஏற்கனவே மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close