மக்களவை தேர்தலில் எங்களது வெற்றிக்கு அமித்ஷாவே ஒப்புதல்: ஸ்டாலின் பதிலடி!

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 10:09 am
mk-stalin-replied-to-amit-sha-for-his-speech-at-up

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி தான் ஆட்சிக்கு வரும் என்பதை அமித்ஷாவே ஒப்புக்கொண்டுள்ளார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். 

அப்போது "எதிர்க்கட்சி கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் ஆட்சியில் இருப்பார்கள் என்றார். அதாவது, திங்கள் கிழமை அகிலேஷ் யாதவும், செவ்வாய்கிழமை மாயாவதியும், புதன்கிழமை மம்தா பானர்ஜியும் வியாழக்கிழமை தேவ கவுடாவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார். ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடுமுறை விடப்படும்" என்று பேசினார் அமித் ஷா. 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 8 அடி உயர சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும்போது, "எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெற்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் ஆட்சியில் இருப்பதாக அமித் ஷா கூறுகிறார். அப்படியென்றால் வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும் என்று அவரே ஒப்புக்கொள்கிறார் என்று தானே அர்த்தம். 

எங்களது கூட்டணி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடுவது இருக்கட்டும், பிரதமர் மோடிக்கு வாரத்தில் எல்லா நாளுமே விடுமுறை தானே" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close