இது மக்களுக்கான பட்ஜெட்: தமிழிசை புகழாரம்!

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 04:14 pm
tamilisai-opinion-about-budget-2019

இடைக்கால பட்ஜெட் சிறப்பாக வந்துள்ளது; இது மக்களுக்கான பட்ஜெட் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இன்று 2019-20ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நிதித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்கள் நல்ல வாழ்க்கை வாழ இந்த பட்ஜெட் வழிவகை செய்கிறது. இது மக்களுக்கான பட்ஜெட். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எதிர்கட்சிகள் இப்போதுதான் ஏழைகளை பற்றி நினைவில் கொள்கிறார்கள்.

ஆனால், சிறு வியாபாரிகளை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஊதியம், வீடு கட்டுபவர்களுக்கு வரிச்சலுகை என அனைத்து மக்களின் வளர்ச்சியையும் இந்த பட்ஜெட் கருத்தில் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் மூலம் கறுப்புப்பணம் மீட்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி மக்களுக்கு என்ன செய்தது? ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானத்தை ஏன் அவர்கள் அறிவிக்கவில்லை? அப்போது இந்த ஏழைகள் கண்ணனுக்கு தெரியவில்லையா? 

ஏழைகள் பற்றி ராகுலை சிந்திக்க வைத்தன் மூலம் மோடி வெற்றி பெற்றுள்ளார். சாமானிய மக்களின் பிரதமராக மோடி உள்ளார்" என்று பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close