இரும்புப்பெண்மணி மம்தா பானர்ஜியை பழிவாங்குகிறார் பிரதமர் மோடி: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 02:23 pm
dmk-president-mk-stalin-supports-mamata-banerjee

மேற்குவங்க முதல்வரான இரும்புப்பெண்மணி மம்தா பானர்ஜியை பழிவாங்குகிறார் பிரதமர் மோடி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகளிடம் வாரண்ட் இல்லை என்று கூறி மாநில போலீசார் அவர்களை தடுத்தனர். மேலும், முதல்வர் மம்தா பானர்ஜியும் அங்கு விரைந்து சிபிஐ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் மூலம் மேற்கு வங்க மாநில ஆட்சியை கவிழ்க்க, மத்திய அரசு திட்டமிடுவதாகக் கூறி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்றிரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து, அம்மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை மோசமாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வரான இரும்புப்பெண்மணி மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி பழிவாங்குகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close