நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டி! - கமல் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 12:02 pm
makkal-needhi-maiam-will-contest-from-all-40-seats-kamal

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும். அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கூட்டணி குறித்து விவாதித்தோம். ஆனால் மற்ற கட்சியின் கொள்கைகளுக்கும், எங்களது கொள்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. 

தமிழகத்தில் உள்ள அதிமுக மற்றும் திமுக கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்.  தமிழக அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. ஒரு வளமான தமிழகத்தை உருவாக்குவதற்கு கிடைத்த வாய்ப்பை தவற விட மாட்டோம். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. கட்சிகளிடையே பேசப்படுவது போல்என்னை பிரதமர் மோடி இயக்கவில்லை.

எங்கள் கட்சியை பொறுத்தவரை கொள்கை தான் முக்கியம். தேர்தலில் சீட் பெறுவது அல்ல. எங்களது கொள்கையில் எந்த மாற்றுக்கருத்தும் முடிவு இல்லை. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கும். அதுவும், தேர்தலில் 25 முதல் 40 வயதுடைய நபர்கள் போட்டியிடுவர். இதற்கான தேர்வு விரைவில் நடைபெறும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதன் மூலம் மற்ற கட்சிகள் ஆட்டம் காணும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று தெரிவித்தார். 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி ? பகுதி - 1 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close