மோடி மீது குற்றம் சுமத்தியது போதும் - வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஆவேசம்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 12:38 pm
actor-ponnambalam-replied-to-suba-veerapandiyan-about-pm-modi

விமானத்தில் பறக்கிறார் மோடி என்று சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டுகிறார். சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை அனைத்து பிரதமர்களும் விமானத்தில் பறக்காமல் என்ன மாட்டு வண்டியிலா பயணம் செய்தார்கள்? என வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஆவேசமாக பேசியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வில்லன் நடிகர் பொன்னம்பலம், "சுப.வீரபாண்டியன் கூறுகிறார், மோடி விலை உயர்ந்த ஆடை அணிகிறார், விமானத்தில் பறக்கிறார்! மோடியா ஏழைத் தாயின் மகன் என்று? நான் அவரிடம் கேற்கிறேன். சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை அனைத்து பிரதமர்களும் விமானத்தில் பறக்காமல் என்ன மாட்டு வண்டியிலா பயணம் செய்தார்கள்?அனைத்து பிரதமர்களும் விமானத்தில் தானே பயணம் செய்தார்கள் .

இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த 1960-70 களில் இருந்த பிரதமர்கள் விமானத்தில் பயணித்தனர். இப்போது இந்தியா மிகவும் வளர்ச்சியடைந்து உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இப்போதுள்ள பிரதமர் விமானத்தில் பயணிப்பது என்ன தவறு. மேலும் ஒரு ஆடை விலை உயர்ந்ததா? இல்லை குறைந்ததா? என்பதற்கு ஏதாவது அளவு கோல் வைத்து உள்ளாரா சுப.வீரபாண்டியன்?

மோடி அணிவது எப்பேர்ப்பட்ட ஆடையாக இருந்தாலும், அது ஏலம் விடப்பட்டு அந்த தொகையை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிடப்படும்.

இப்படி இதுவரை மோடியின் பல ஆடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது.  அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு மோடியின் ஒரு ஆடை 4 .31 கோடிக்கு ஏலம் போனது. அது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் நீங்கள் (சுப.வீரபாண்டியன்) அணியும் ஆடையை சும்மா வாங்க கூட ஆள் இல்லை என்று நகைச்சுவையாக பேசினார் பொன்னம்பலம்.

மேலும் இந்து நம்பிக்கைகளை மட்டும் எதிர்க்கும் உங்களின் வேஷம் கலைந்துவிட்டது , முருகன் இல்லை , சிவன் இல்லை என்று மேடைக்கு மேடை கூறும் உங்கள் தலைவருக்கு ஏசு இல்லை , அல்லா இல்லை என்று கூற தைரியம் இருக்கிறதா?" என்று சுப.வீரபாண்டியன் மற்றும் வீரமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பொன்னம்பலம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close